1200 x 80 DMirror

 
 

நாட்டில் சடுதியாக டொலரின் பெருமதி 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் தாக்கம், நாட்டின் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றது.

அந்நிலையில், நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாட்டின் பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இதனிடையே நாட்டில் லாப் சமயல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
நாட்டில் ஒரு நாளைக்கு 1100 மெட்ரிக் டொன் எரிவாயு பயன்பாட்டுக்கு அவசியமான நிலையில் கடந்த வெள்ளியன்று (11)இறக்குமதி செய்யப்பட்ட 3600 மெட்ரிக் டொன் எரிவாயு , கையிருப்பானது அவ்வாறு இன்றுடன் (14) தீர்ந்து போகும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


தலா 3500 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் இரு கப்பல்கள் இலங்கை கடலில் நங்கூரமிட்டுள்ள போதிலும் அக்கப்பல்களிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யவதற்கான கடன் கடிதங்கள் இன்று வெளியிடப்படாவிட்டால் மீள சமயல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


லிட்ரோ நிறுவனமானது சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களை நாளொன்றுக்குச் சந்தைக்கு விநியோகிக்கும் நிலையில் கடந்த முதலாம் திகதி முதல் அந்த விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது.


கடந்த 11 ஆம் திகதி முதல் தகனசாலைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்திற்கும் எரிவாயு விநியோகிக்கப்பட வில்லை என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நாட்டில் பல உணவகங்களுக்கு மேலதிகமாக சுமார் 1000 திற்கும் அதிகமான பேக்கரிகள் சமயல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகக் கால வரையறையின்றி மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.


பல உணவகங்களில் சேவைகள் மட்டுப்பாடுத்தப்பட்டுள்ள அதேவேளை, வீடுகளிலும் சமயல் எரிவாயு தட்டுப்பாடு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் தக்கம் தற்போதும் தொடர்கிறது.


முதலாம் திகதி முதல் நளார்ந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் வரை விநியோகிக்கப்பட்டு வந்த 5 கிலோ நிறையுடைய சிலிண்டர்கள், 16 ஆயிரம் வரையில் விநியோகம் செய்யப்பட்டு வந்த 2.3 கிலோ நிறையுடைய சிலிண்டர்களின் விநியோகமும் முடங்கியிருந்தன.


இதனைவிட கடந்த 4 ஆம் திகதி முதல், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தகன சாலைகளில் பயன்படுத்தப்படும் 37.5 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விநியோகமும் லிட்ரோ நிறுவனத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிலிண்டர்கள் நாளொன்றுக்கு 2600 முதல் 3000 வரையில் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன.


இந்த தட்டுப்பாடு முழுமையாக சீர் செய்யப்படாத நிலையில், மீள தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனிடையே, நாட்டில், நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக சமையல் எரிவாயு இறக்குமதி தொடர்பில் தாம் இரு முறை சிந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இந்த நிலைமையைச் சமாளிக்க நாட்டு மக்கள் எவ்வாறு தயாராகி இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குரியதாகின்றது.
எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளின் போது ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
தற்போது கிராமங்களிலும் கூட ஏராளமான உணவகங்கள் நிறுவனங்கள் வீடுகள், எரிவாயு சிலிண்டரை நம்பியிருக்கும் நிலை உள்ளது.


தொடர் மாடி குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகளிலும் நகர்புரங்களிலும் வாழும் மக்களுக்கு எந்த ஒரு மாற்று வழிமுறையும் தற்போதைக்கு அரசு முன்வைக்க வில்லை.


அத்தியாவசிய உணவு, எரிபொருள், போக்குவரத்து என அனைத்திலும் அடிமேல் அடி வாங்கும் நாட்டு மக்களுக்கு இது மற்றொரு பேர் இடி என்பதில் சந்தேகமில்லை.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி