1200 x 80 DMirror

 
 

சர்வதேச சாசனத்தில் கையொப்பமிட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் சனத்தொகையில் 8.7 வீதமானவர்கள் ஏதோவொரு வகையான ஊனமுற்றவர்களாக உள்ளனர். அவர்களில் 57% ஆண்கள் மற்றும் 43% பெண்கள்.

2007 ஆம் ஆண்டில், இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள 160 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஊனமுற்ற குடிமக்களை சமமாக நடத்துவோம் என்ற வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என மாற்றுத்திறனாளி சமூகம் கவலை தெரிவிக்கிறது.

“எங்கள் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2009, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து தீர்ப்பளித்துள்ளது. 1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க சட்டம், வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் பார்வையற்றோர் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் உரிமைகள் மற்ற குடிமக்களைப் போலவே இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்த போதிலும், இதுவரை நடைமுறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை, ”என மாற்றுத்திறனாளிகளுக்கான கொழும்பு கூட்டமைப்பின் தலைவர் டிக்கிரி குமார ஜயவர்தன கூறியுள்ளார்.

“துரதிர்ஷ்டவசமாக, குறைந்தபட்சம் நமது தலைநகரங்களில், சக்கர நாற்காலிகள் செல்லக்கூடிய பாதைகள் இல்லை.
புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, ஆனால் சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய கழிப்பறை இல்லை.
வைத்தியசாலைக்குச் சென்று தங்கி சிகிச்சை பெற வழியில்லை. பேருந்தில் பயணிக்க முடியாது.

அதிகாரிகளும், சமூகமும் உணர்திறன் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம்.”
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கையெழுத்திட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும், இலங்கையில் இது இன்னும் சட்டமாக மாறாததால் கவலையடைந்த மாற்றுத்திறனாளி அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ஆம் திகதி இடம்பெறும், சக்கர நாற்காலி தினத்தை நினைவுகூர்ந்து மார்ச் 2ஆம் திகதி அனுஷ்டித்து, தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைப்பதோடு, மாத்தறை, கொழும்பு, குருநாகல், மொனராகலை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகளிடமும் இது கையளிக்கப்படுகிறது.

போரினால் அங்கவீனர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கில் உள்ள எந்த மாவட்டமும் “சக்கர நடைப்பயணம்” வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

“பல வருடங்களாக எங்களின் அடிப்படைத் தேவையாக காணப்படும் ஒரு இடத்திற்குச் செல்வதற்கான வசதியை மீண்டும் அரசுக்கு நினைவூட்ட வேண்டியதாயிற்று. சக்கர நாற்காலியில் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல ஆண்டுகளாக பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களிடமிருந்து பல கோரிக்கைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.”

கண்டி உரிமைகள் அமைப்பின் தலைவி நிஷா ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட செயலாளர்களின் பங்களிப்புடன் மார்ச் 25ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்களின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் ஊனமுற்றோர் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி