1200 x 80 DMirror

 
 

இயற்கை ஆற்றுக் கழிமுகமாக வளரும் சுற்றுச்சூழல் அமைப்பில் சட்டவிரோத மணல் அகழ்விற்கான அனுமதிகளை வழங்கியுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் மீது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இயற்கையான ஆற்றுக் கழிமுகமாக உருவாகி வரும் மகாவலி ஆற்றின் ஷாபி நகர் பகுதியில் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாரிய மணல் அகழ்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கென அஹங்கம மண் அகழ்வு நிறுவனத்திற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தேவைக்கு அமைய சட்டவிரோதமான முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான இயற்கையான ஆற்றுக் கழிமுகத்தில் பாரிய மணல் அகழ்வுக்கு அனுமதியளித்தமை சட்டவிரோதமானது எனவும் அது தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எனினும் எந்தவித விசாரணையும் இன்றி சட்டவிரோதமாக வழங்கப்பட்ட மணல் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி ஷாபி நகர் பகுதியில் பாரிய மணல் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை எனவும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் பாரிய அகழ்வாராய்ச்சிகளுக்கு உரிமம் வழங்கினால், சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்து சுற்றுச்சூழலின் உணர்திறன் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம், பெரிய அளவில் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவது சட்ட விரோதமான செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் அதிகாரம் சுற்றாடல் அமைச்சருக்கு இருந்த போதிலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் அதன் பணிப்பாளரின் அரசியல் நலன்களை கையாள்வதாக சுற்றாடல் ஆர்வலர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஷாபி நகர் பகுதியில் சிறிய அளவிலான மணல் அகழ்விற்கு பிரதேச மக்கள் அனுமதி கோரிய போதிலும், கூடை ஊடாக மணல் அள்ளுவதால் இந்த இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்து, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அந்த நிராகரித்துள்ளதாகவும் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

விசல்மா கூட்டமைப்பு மணல் அகழ்விற்கான அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தாலும் அப்பகுதியின் சுற்றுச்சூழல் உணர்திறன் காரணமாக மணல் அனுமதிப்பத்திரத்தை வழங்க புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மறுத்துள்ளது.

அனுமதியற்ற பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஷாபி நகர் பகுதியில், மகாவலி ஆறு பாய்வதால், இயற்கையாக உருவாகும் குளங்களும் மணல் படிவுகளும் அதிகளவில் காணப்படுவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''ஆனால் அந்த பகுதிகளில் மணல் படிவுகளை அகற்ற வேண்டும் என்றால் முறையான ஆய்வு நடத்த வேண்டும்.

பிளாஸ்டிக் குழாயின் கீழ் அனுப்பப்படும் அளவை அளந்து அப்பகுதியில் மணல் உள்ளதா என்பதை கிராம மக்கள் கண்டுபிடிக்கின்றனர். புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இந்த மணல் உரிமங்களை வழங்குவதற்கு முன்பே மணல் படிமத்தின் அடர்த்தி இப்படித்தான் அளவிடப்பட்டது. "
அவ்வாறான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தேவையில்லை என சுற்றாடல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் மேலும் வலியுறுத்துகின்றார்.

மணல் அகழ்வின் பின்னரான பேரழிவை கட்டுப்படுத்த முடியுமாயின் அனுமதி வழங்குவது அறிவியல் முறைமை என்றாலும் இங்கு அரசியல் செல்வாக்கின் பேரில் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல் மணல் அகழ்வு நடைபெறுவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

"2021 திருகோணமலை பகுதியில் மணல் அகழ்வு தொடர்பான 2021/57 / LS அறிக்கைக்கு அமைய, ஏற்கனவே பெருமளவிலான மணல் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன, இதனால் மகாவலி ஆற்றின் கரையில் பாரிய சேதம் மற்றும் பிரதேசத்தின் உப்புத்தன்மை அதிகரித்துள்ளது," என அவர் கூறினார்.

அத்துடன், மகாவலி ஆற்றின் இடது கரையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் 2021ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டதாகவும், சேருவாவில தொடக்கம் கிண்ணியா வரையான 22 கிலோமீற்றர் தூரத்திற்குள் 1,300 மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் மற்றும் இயற்கை கற்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கந்தளாய் மற்றும் சேருவாவில பகுதிகளில் மணல் அகழ்வினால் ஏற்படும் உப்புத்தன்மை காரணமாக சுமார் 60,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாரியளவில் சேதமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள, சுற்றாடல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் இலங்கையின் ஆற்றுச்சூழல் அமைப்பில் மணல் அகழ்வதற்கு அனுமதியளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது எதிர்காலத்தில் பாரிய சுற்றாடல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி