1200 x 80 DMirror

 
 

நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து, தற்போது ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கலாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில்,

சிபேட்கோ நிறுவனம் தமது எரிபொருள் விலையை நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 77 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 76 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 176 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 254 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்திருந்த நிலையிலேயே, சிபேட்கோ நிறுவனமும் நேற்று முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி