இலங்கை தொடர்ந்தும் தீர்வுகளைத் தேடும் நாடாக இல்லாமல் மென்மேலும் பிரச்சினைகளை உக்கிரமடையச் செய்யும் நாடாகவே

ஆகிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் அரசியல் தலைவர்கள், நாடு வீழ்ந்திருக்கும் பாதாளத்திலிருந்து மீட்டெடுத்தல் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தமது தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் இவ்வருட ஜனாதிபதி தேர்தலும் பயன்படுத்திக் கொள்ள உள்ளதாக நினைக்கத் தோன்றுவது கொள்கைகள் அல்லது வேலைத்திட்டங்களை வெற்றி கொள்ளச் செய்யும் அரசியல் செயற்பாட்டாளர்களை விட ஆட்களை வெல்ல வைக்கும் அரசியல் செயற்பாட்டையேயாகும்.

வெற்றி பெறும் வேட்பாளர்களைத் தேடுதல்

அனைத்து கட்சிகளும் வெற்றி பெறும் அபேட்சகர்களைத் தேடிக் கொண்டிருப்பது மாத்திரமின்றி வேலைத்திட்டங்களுக்கு வழங்கியிருப்பது எதுவுமேயில்லை. வேலைத்திட்டங்களுடனான தலைவர்களைக் கொண்டு வருவதற்கு பதிலாக முதலில், வேட்பாளரை களமிறக்கிவிட்டு, இரண்டாவதாக “கவா்ச்சிகரமான” வேலைத்திட்டங்களை முன்வைக்கும் கொள்கையினை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு எவ்விதமான அங்கீகாரங்களும் இல்லை என்பது மாத்திரமின்றி அவை நிறைவேற்றப்படாவிட்டாலும் அந்த வேட்பாளருக்கு வாக்களித்த மக்களால் எதுவும் செய்ய முடியாது. காரணம் அவ்வாறு முன்வைத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் அந்த வேட்பாளருக்கு, வாக்களித்த மக்களுக்குடன் சட்டரீதியாக எந்த பிணைப்பும் இல்லாமையேயாகும். எனவே அவற்றை நிறைவேற்றப்படாவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இலங்கையில் உருவாக்கப்பட்டிருக்கும் கலாசாரத்தினைக் கவனிக்கும் போது முதலாவது வேலைத்திட்டத்தை முன்வைத்துவிட்டு இரண்டாவதாக அபேட்சகரை முன்னிறுத்தினாலும் அதில் மாற்றங்கள் இருப்பதாக நினைக்க முடியாது. எனினும் அது முக்கியத்துவமாக அமைவது முதலில் வேலைத்திட்டத்திற்கு பதிலாக மக்கள் ஒன்றுபட வேண்டியதாகும்.  அவர்கள் வேட்பாளரை இனங்கண்டு கொள்வது அதன் பிறகாகும். அவ்வாறிருந்தும் அந்த வேட்பாளராலும் அந்த வேலைத்திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பது சட்டவிரோதமான விடயம் அல்ல என்பதைப் போன்று வெட்கப்பட வேண்டிய விடயமுமல்ல.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி