1200 x 80 DMirror

 
 

 

நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.


மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால், "நாட்டின் குறுகிய கால பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கான எட்டு அம்ச கொள்கைகளுடன்" முன்மொழிந்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தாங்க முடியாத கடன் சுமையில் இருப்பதாக எச்சரித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, மத்திய வங்கி அந்நிய செலாவணி மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான திட்டங்களை முன்வைத்தது.


இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்காக நாணய மாற்று விகிதத்தை தீர்மானிப்பதற்கு சந்தைக்கு அனுமதி வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்திருந்தது.


மத்திய வங்கி ஆளுநரின் முன்மொழிவுகளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புறக்கணித்ததாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் குற்றம் சுமத்தினர்.


மத்திய வங்கியின் ஆளுநரால் சமூக ஊடக பதிவல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள எட்டு முக்கிய விடயங்கள் கொண்ட தொகுப்பு கீழே உள்ளது.

image 1

 

(அ)மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முன்னைய பரிந்துரையின் அடிப்படையில்
அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதற்கான
வழிமுறைகளை அறிமுகப்படுத்தல்
(ஆ) செலவினைப் பிரதிபலிக்கும் விதத்தில், எரிபொருள் விலைகளையும் மின்சாரக கட்டணங்களையும் உடனடியாக அதிகரித்தல்
(இ) வெளிநாட்டுப் பணவனுப்பல்களுக்கும் முதலீடுகளுக்கும் மேலும் ஊக்குவிப்புக்களை வழங்குதல்
(ஈ) சக்திப் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை,
மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான முயற்சிகளை துரிதப்படுத்தல்
(உ) நிலையான அடிப்படிடையொன்றில் பொருத்தமான வரி அதிகரிப்பு ஊடாக அரசாங்க
வருமானத்தை அதிகரித்தல்
(ஊ) அவசரமான அடிப்படையில் வெளிநாட்டு நிதியிடல் மற்றும் படுகடனற்ற வெளிநாட்டுச்
செலாவணி உட்பாய்ச்சல்களை திரட்டுதல்
(எ) உபாயமற்ற மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களைப் பணமாக்குதல்,
அத்துடன்
(ஏ) அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதனக் கருத்திட்டங்களை பிற்போடல்

 

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதன் சமீபத்திய நாணயக் கொள்கை மதிப்பாய்வை கொள்கையின் முழுவடிவம் 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி