தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நிகழ்வுகளில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய வரவேற்பு கிடைக்காமை

தொடர்பில் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது மூன்று மகன்களும் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்கள் அது தொடர்பில் கோத்தாபயவின் பிரசார திட்டம் வகுப்போரிடம் அதிருப்தியைத் தெரிவித்திருப்பதாகவும் ராஜபக்ஷ குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்தது பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே எனத் தீர்மானித்ததன் பின்னரேயாகும் என்ற போதிலும் தற்போது ஜனாதிபதி தேர்தல் வரையில் இடைவெளிகளை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்படும் “நிகழ்வுகளில்” அது பற்றி தெரிவிக்கப்படாமையே இவ்வாறு குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு காரணமாகியுள்ளதாகவும் அத்தரப்பினர் மேலும் கூறின.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவும் சமமாக தோன்றும் பிரசார திட்டங்கள் தாமரை மொட்டு கட்சியினால் திட்டமிடப்பட்டுள்ள போதிலும் கோத்தாபய ராஜபக்ஷவின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் குழுவினால் நாடு முழுவதிலும் காட்சி படுத்தியிருந்த சில போஸ்டர்கள் மற்றும் கட்டவுட்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்தளவு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்