1200 x 80 DMirror

 
 

விரைவில் இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று மருந்து இறக்குமதியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வங்கிகள் கடன்பத்திரம் வழங்க மறுப்பதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த நிலை நீடிப்பதாகவும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர்கள் இல்லை எனக் கூறி கடன் பத்திரங்களை வழங்க மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர் நெருக்கடிகளினால் இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை நீடிக்குமாயின் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தற்போதைய நிலையை சரியாக கையாளத் தவறினால் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 25 முதல் 30 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மருந்துப் பொருட்கள், எரிபொருட்கள், உற்பத்தி மூலப் பொருட்கள் ஆகியவற்றுக்கு இறக்குமதியின் போது முன்னுரிமை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது,

எனினும், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட முடியாமல் இருப்பதன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உச்சம் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி