1200 x 80 DMirror

 
 

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரதின ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற 'கோப்' குழுவின் தலைவரான பேராசிரியர் சரித ஹேரத், 'அட்வகேட்டா பிளஸ்' நிகழ்ச்சியில் தனநாத் பெர்னாண்டோவுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை சமாளிக்க கூடியதாக உள்ளது என அரச தரப்பினர் கூறி வந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரதின இந்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து வெளியில் இருந்து எவ்வகையான செய்திகள்  பரப்பப்ட்டாலும் இறுதி முடிவை எடுக்கவேண்டியவர்கள் கொள்கை வகுப்பாளர்கள்தான்.

அவர்கள்தான் நாட்டிற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும்.அந்த வகையில் அரசியல் பிரமுகர்களுடனான குறித்த நிகழ்ச்சியானது, அவர்களின் அரசியல் அனுபவங்களை பற்றியது அல்ல.

இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர்கள் என்ன முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிவதாகும்.அவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரச தரப்பு எவ்வகையான முடிவுகளை எடுத்துள்ளது என்பதை பற்றி இந்த காணொளியில் தெளிவினை பெற முடியும் என நப்புகின்றோம்.

 

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி