leader eng


கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளரை மார்ச் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


IBC ஊடக நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய செய்தியாளர் இலட்சுமனன் தேவபிரதீபனை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், ஏறாவூர் பொலிஸார், பெப்ரவரி 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை வேலுப்பிள்ளை நந்தன் கைது செய்யப்பட்டார்.


அத்தோடு, சந்தேகநபரின் கைத்தொலைபேசியை காவலில் எடுத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை(26) வந்தாறுமூலை பிரதான வீதியில் அமைந்திருந்த பேருந்து தரிப்பிடம் ஒன்று இடித்து அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்தி சேகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவபிரதீபன் தாக்கப்பட்டுள்ளார்.


விபத்தில் உயிரிழந்த உள்ளூர் சமூக சேவகர் ஒருவரின் நினைவாக 2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை இடித்துத் தள்ளுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


ஊடக ஒருங்கிணைப்பாளரும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளரும் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான உரையாடலை படம்பிடித்துக் கொண்டிருந்த குறித்த ஊடகவியலாளரை தாக்கியதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தாக்குதலுக்கு இலக்காகி இதில் உபாதைக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
குறித்த பஸ் நிலையம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வேலுப்பிள்ளை நந்தன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் என பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


இதனிடையே கடந்த ஆண்டு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் அவரின் மெய் பாதுகாவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் எனும் டிப்பர் வாகன சாரதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி