ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை உள்ளிட்ட பிரதான ஐந்து சம்பவங்கள் தொடர்பில் உறுதியற் அறிக்கையை

வழங்க வேண்டாம் என சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி அனுப்பிய கடிதத்தில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட அறிக்கை உறுதியற்ற அறிக்கையாக தெரிவதாகக் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் ஆகியோரின் கொலை உள்ளிட்ட ஐந்து பிரதான சம்பவங்கள் தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கைக்கு பதில் பொலிஸ் மா அதிபா் ஆகஸ்ட் 21ம் திகதி பதில் வழங்கியிருந்தார். 

இது தொடர்பில் பீபீசி சிங்கள சேவை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளின் பிரதி தற்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும் சட்டமா அதிபர் ஆகஸ்ட் 23ம் திகதி பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தில் குறித்த அறிக்கை தொடர்பில் “திருப்தியற்ற நிலை” தோன்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

அதற்கான காரணங்கள்,- முழுமையான சாட்சிகளின் நிலை தெளிவில்லாமை

- லசந்த விக்ரமதுங்கவின் கொலை, வசீம் தாஜூதீனின் கொலை, மூதூரில் 17 பணியாளர்களைக் கொலை செய்தமை தொடர்பான சந்தேக நபர்கள் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் இல்லாதுள்ளமை.
- விசாரணைகளின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படாமை.
- விசாரணைகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் உறுதியான கால எல்லைகள் குறிப்பிடப்படாமை.
- சட்டமா அதிபரிடம் தேவையான சட்ட ஆலோசனைகள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்காமை.
-விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் விசாரணைகள் இதுவரையில் முடிக்கப்படாமை.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் போது தாமதங்கள் ஏற்படுகின்றனவா என பீபீசி சிங்கள சேவையின் கேள்விக்கு பதலிளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவ்வாறான தாமதங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஆறு சம்பவங்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

ஊடவியலாளர் லசந்த விக்மரதுங்கவின் கொலை, ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை உள்ளிட்ட பிரதான ஆறு சம்பவங்கள் தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிக்கை கோரியிருந்தார்.  அது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடைமுறைப்படுத்திவரும் ஐந்து பிரதான விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபரினால் கடந்த 15ம் திகதி பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்கியேயாகும். 

அந்த கடிதத்தில் சட்டமா அதிபர் பின்வரும் விபரங்களைக் கேட்டிருந்தார்.1. லசந்த விக்ரமதுங்கவில் கொலை.2. வசீம் தாஜூதீனின் கொலை.3. 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை.4. கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம்.5. மூதூரில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டமை.இந்த ஐந்து சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தாமதமின்றி நிறைவு செய்து, விசாரணைகளின் பிரதியை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதற்கு மேலாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பதில் பொலிஸ் மா அதிபர் விடயங்களைக் கோரியிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி