1200 x 80 DMirror

 
 


எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது எதிர்பார்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்திவரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.


தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தமது யோசனைகள் சமர்ப்பித்துள்ளது.


இந்த யோசனைகள் தொடர்பில், அரசியற் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றிற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு ​அழைப்பு விடுத்துள்ளது.


குறித்த கலந்துரையாடலில் எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் கட்சிகளின் நிலைபாட்டை தேர்தல் ஆணைக்குழு ​அறிய உள்ளது.


இதேவேளை அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்களை தேர்தல்கள் தேர்தல்கள் ஆணைக்குழு நீக்கியுள்ளது.


தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்கவினால் பெப்ரவரி 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு கிரீடம் மற்றும் ஒரு விவசாயி ஆகிய சின்னங்கள் இவ்வாறு மேற்கூறிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


கடந்த ஜனவரி 21ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் இந்த இரண்டு நபர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி