குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையொன்றுக்கமைய, சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி சமூக செயற்பாட்டாளர் ஷெயான் மாலக்க கமகே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குறித்து தொடர்ச்சியாக விமர்சித்துவந்த செயான் மாலக்க, பலமுறை குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

8 நாள் தொடர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும், இன்று பிற்பகல் ஷெயான் மாலக்க பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை வேனில் வந்தவர்களினால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதாக செயான் மாலக்க தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் பேச்சாளரிடம் கேட்டபோது, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, தொடர் விசாரணைகளை நடத்த ஷெயான் மாலக்க கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி