1200 x 80 DMirror

 
 

எந்தவொரு அறிவியல் பூர்வான காரணங்களும் இன்றி கொவிட் தவிர்ப்பு (Exit Strategy) வழிகாட்டியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளதாக சுகாதார சேவையின் முன்னணி தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை விடுவிக்க பரிந்துரைக்கப்பட்ட 10 நாட்களின் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது சமூகத்தில் தொற்று நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும், நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடும் தடையாக இருக்கும் என்றும் மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகளின் வல்லுநர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"இந்த வழிகாட்டுதலின் விளைவாக, சுகாதார ஊழியர்கள் 7 நாட்களுக்குள் வேலைக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும், இது சுகாதாரப் பணியாளர்களிடையே கடுமையான நோய் பரவுவதற்கு வழிவகுக்கும். அத்துடன் எதிர்காலத்தில் சுகாதார சேவைக்கும் இடையூறாக அமையும்.

அத்தகைய முடிவை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றால், கொவிட் வழிகாட்டுதல்களில் நாட்களின் எண்ணிக்கையை நகர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில் அதை அரை நாளாகக் கூட செய்யலாம்" என்று நிபுணர் வலியுறுத்துகிறார்.

இந்த நாட்களின் எண்ணிக்கையை இன்னும் அறிவியல் ரீதியாக தீர்மானிக்க வேண்டுமானால், பத்து நாட்கள் மற்றும் ஏழு நாட்கள் கடந்த பின்னர், இரண்டு மாதிரிகளை பரிசோதித்து அறிக்கையிட அனுமதிக்குமாறு மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் சங்கம் சுகாதார அமைச்சகத்திடம் கோருகிறது.

 

Exit Strategy for COVID 19 Patients and Contacts 220127 130708

Exit12 and Contacts 2

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி