leader eng

கடலில் சாவதை விட வீதியில் சாவோம் என யாழ் மீனவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். தமிக மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்து யாழில் மீனவர்கள் கன்வனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமது போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், கடலில் எப்போது சாவோம் என்று எமக்கு தெரியாது. ஆகவே வீதியில் போராடி சாவோம் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

எமது கடற்பரப்பில் நாளுக்கு நாள் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாம் சொல்லி சொல்லி பார்த்தோம் ஒரு பிரியோசனமும் இல்லை. கடல் வளம் அழிக்கப்படுகிறது, எமது மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு தீர்வு வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அவர்களின் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றோம். கடலில் எப்போது சாவோம் என்று தெரியாது. ஆகவே வீதியில் போராடி சாவோம் என்று முடிவெடுத்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எ9 வீதி முடக்கப்படும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.பலாலி - வளலாய் பகுதியிலும் மீனவர்கள் வீதியை முடக்கி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் வீதிகளின் குறுக்கே மேலும் மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Gallery

Gallery


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி