1200 x 80 DMirror

 
 

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் இன்று (31ஆம் திகதி) முதல் ஒரு வாரத்திற்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் விசேட தடுப்பூசி திட்டம் அமுல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத அனைவரும் இந்த வாரத்தில் அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அல்லது வைத்தியசாலைக்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நாட்டில் எந்தவொரு நபருக்கும் பலவந்தமாக தடுப்பூசி போடப்படாது எனவும், தடுப்பூசி போடுவது அனைவரின் கடமை எனவும் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் உயிரிழப்பு நேரிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் பொது இடங்களில் தடுப்பூசி போடப்படுவதை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கவனிக்கவும்!

கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் தடுப்பூசித் திட்டத்தின்படி, இன்றும் (31) பல இடங்களில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் அந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி