நாட்டில் தற்போது சில மருந்துப் பொருட்களுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


அத்துடன், கொவிட் தொற்றைக் கண்டறியும் ரெபிட் அன்டீஜன் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனால், கொவிட் நோயாளர்களை அடையாளம் கண்டுக்கொள்வது மாத்திரமன்றி, அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளை கூட செய்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட ரெபிட் அன்டீஜன் உபகரணங்களை, ஔடத விநியோக பிரிவு விநியோகிக்காமையினால், இந்த நிலைபை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய தேசிய வைத்தியசாலைகள், இரத்தினபுரி போதனா வைத்தியசாலை, அம்பாறை, கராபிட்டி, பேராதனை, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பெரும்பாலான வைத்தியசாலைகளில் ரெபிட் அன்டீஜன் பரிசோதனை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெபிட் அன்டீஜன் உபகரணங்களின் ஊடாக செய்யக்கூடிய பரிசோதனைகளை PCR பரிசோதனை ஊடாக செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்த கருத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி