Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

47 மேலதிக வாக்குகளால் தமிழரசின் தலைவரானார் ஸ்ரீதரன்

T

The Leader Desk

ஜனவரி 21, 2024 • 9:23 AM

47 மேலதிக வாக்குகளால் தமிழரசின் தலைவரானார் ஸ்ரீதரன்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.
  • புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.
  • திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பு, 11 மணியளவில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.

புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

தமிழர் தாயகத்தின் முன்னணி கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நிறைவடைந்த நிலையில், சிறிலங்கா காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தாமதமடைந்த நிலையில் ஆரம்பமாகின.

திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பு, 11 மணியளவில் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாதபிரதிவாதங்கள் காரணமாக வாக்கெடுப்பு தாமதமாகியது.

இலங்கை தமிழரசு கட்சியின் 330க்கும் மேற்பட்ட பொது சபை உறுப்பினர்கள் மாத்திரம் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

எனினும், இந்த கோரிக்கையை தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் நிராகரித்ததை அடுத்து, குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப. சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில், அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்த நிலையில், தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், இன்றைய தினத்துக்குள் புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரகசிய வாக்கெடுப்பின் முடிகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக அவரது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் களத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மட்டும் வாக்களிக்காமல் ஏனையோரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்து முரண்பாடுகள் தான் இந்த குழப்ப நிலைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்களுமாக 336பேருக்கு அதிகமானவர்கள் வாக்களிக்க முடியும்.

இதுவரையில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வந்த தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு முதன்முறையாக தேர்தர் அடிப்படையில் முடிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

47 மேலதிக வாக்குகளால் தமிழரசின் தலைவரானார் ஸ்ரீதரன் | Tamil Leader | We Lead the Nation