இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி தன்னை நீக்கியது தனது அரசியல் எதிர்காலத்திற்கான பாக்கியம் என தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு அமைச்சில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தன்னை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது பெரிய விடயம் இல்லை எனவும், சட்டத்தரணியான தாம் நாளை நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் தெல்கந்த சந்தையில் தனக்கு அதிஸ்டம் அடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த,

கேள்வி. என்ன நடந்தது அமைச்சரே?

“என்னை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது செய்தியே தவிர வேறொன்றுமில்லை.. இவையெல்லாம் பெரிய விஷயங்கள் அல்ல. 2000ல் அமைச்சரானேன். பாராளுமன்றத்துக்கு வந்தேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியுள்ளேன். எனக்கு தொழில் இருக்கிறது. நாளை அங்கே... நீதிமன்றத்திற்குப் போகிறேன்."

கே. இது குறித்து உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா?

"இல்லை. பொதுவாக அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை. அவர் நீக்கப்பட்டதைத்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன."

கே. நீங்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

"அவ்வாறு காரணங்களை கூற வேண்டிய அவசியமில்லை. நிறைவேற்று ஜனாதிபதி யாரை நீக்க விரும்புகிறாரோ அவர்களை நீக்க முடியும்."

கே. என்ன நடந்தது?

“நேற்று முன்தினம் சந்தைக்குப் போனபோது, ​​ஒருத்தர் வந்து பொருட்களின் விலையை கேட்டார், ஒரு கிலோ பச்சை மிளகாய். 1,20​0 ரூபா விவசாயம் முழுக்க தோல்விடைந்துள்ளது என்று சொன்னேன்.. எடுத்த கொள்கை முடிவுகள் தோல்வி எனறேன் மக்கள் சார்பாக பேசினேன். "

கே.அமைச்சர்கள் முன்பு அரசை விமர்சித்துள்ளனர்.

"அமைச்சரவையில் ஏதோ பேசப்பட்டதாக நினைக்கிறேன். பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதியின் அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களாகக் கூட இருக்க முடியாதவர்கள். கல்வியின் மதிப்பு அவர்களுக்குப் புரியவில்லை."

கே. அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிறகு நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்?

"நான் அரசாங்கத்தில் அரசியல்வாதியாக எனது கடமையை செய்துள்ளேன். நடந்தது எனது அரசியல் எதிர்காலத்திற்கு கிடைத்த வரம்."

கே. ஜனாதிபதி அத்தகைய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்த்தீர்களா?

“இப்படி எடுக்கவில்லை என்றால்தான் பிரச்சனை.நாட்டின் பொருளாதாரத்தை எங்கு வழிநடத்தப் போகிறோம் என்பதை இது காட்டுகிறது. மக்கள் சார்பாக பேச வேண்டும்.அரசாங்கத்தில் பேசாமல் இருந்தால் சரியாக இருக்காது. அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, நான் மக்கள் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளேன் அதற்காக எனது கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

கே. உங்களை நீக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதா?

"ஆம், அப்படி ஒரு செய்தி இருக்கிறது."

கே. அது யாருடைய வேலை?

"இது ஒரு நிறைவேற்றுத் தீர்மானம் யாருடைய வேலையும் இல்லை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. 20 இல்லாவிட்டாலும் அதற்கு அந்த அதிகாரங்கள் இருந்தன. 20 இன் படி பிரதமரைக் கூட நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு."

கேள்வி: எதிர்கால அரசியலில் இது ஒரு திருப்புமுனையாக அமையுமா?

"எனது அரசியல் 1991 ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கோட்டே மாநகர சபை உறுப்பினராக ஆரம்பித்தேன். 11 வருடங்களாக சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்தேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சுதந்திரக் கட்சியை வழிநடத்திச் சென்றுள்ளேன். பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு ஒரு அரசியல் வரலாறு உண்டு."

கே. இந்த முடிவுக்கு அரசாங்கம் வருத்தப்படுமா?

"எனது விஷயத்தில் எடுக்கப்பட்ட முடிவை விட அரசு எடுக்கும் மற்ற முடிவுகளை நாம் பரிசீலிக்க வேண்டும். இந்த அனைத்து விஷயங்களிலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை முடிவு எடுக்க நாட்டு மக்களுக்கு வாய்ப்பு உள்ளது. பிறகு என்ன முடிவு எடுக்கப்படும் என்று பார்ப்போம்."

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி