தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு கிழக்கு மாகாணத்தில் சீனாவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

“இது குறித்து இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளோம். மறுபுறம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் நீண்டகால நோக்கில் வெளிநாட்டவர்கள் தலையுடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

சீனத் தூதுவர் கொழும்பில் இருந்து வடக்கிற்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டு ஒரு நாள் கழித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

JC 2021.12.21 1

தமிழ் கட்சிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புத்தாண்டு பேச்சுவார்த்தை முடிவுகள்

“அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவுகளை இலங்கையர்கள் காண முடியும்” என்று அவர் கூறினார். சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 15-22 வரை, அமெரிக்காவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பிரதிநிதிகள், உலகளாவிய தமிழர் பேரவை (GTF) உடன் இணைந்து, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை வாஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் சந்தித்தனர்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கான எமது விஜயத்தின் முடிவுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் அனைவருக்கும் தெரியவரும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 18ஆம் திகதி இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கையில் வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் அமெரிக்காவுடனும் அதன் பின்னர் இலங்கையிலுள்ள ஏனைய நாடுகளின் தூதுவர்களுடனும் பேசினாலும் அவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு ஏற்றதல்ல என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

“இந்த கலந்துரையாடல்களை நாம் உரிய நேரத்தில் முன்னெடுத்ததன் காரணமாகவே தமிழ் மக்களின் பிரச்சினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இதேபோன்ற பயணத்தை மேற்கொண்டோம். அதன் பின்னரே மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு அமெரிக்கா உள்ளிட்ட பலம் வாய்ந்த மேற்குலக நாடுகளின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் ஆளானது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி