இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நேரத்தில் மத்திய வங்கியிடம் பணத்தை அச்சிடும் இயந்திரம் இருந்தாலும் நினைத்த நேரத்தில் பணத்தை அச்சிட்டு அரசாங்கத்திற்கு வழங்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

சீதுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சந்தையில் அரிசியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. உணவகங்களில் தற்போது ஒரு வேளை உணவை வழங்க நிலைமைக்கு சென்றுள்ளன. நகைக்கடைகளில் இருக்கும் தங்க ஆபரணங்களின் விலைகளை விட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளன.

உலகில் வேறு நாடுகளில் இப்படியான நிலைமையை நாம் இதற்கு முன்னர் கண்டுள்ளோம். இது ஒரு சக்கரம். அந்த நெருக்கடியான நிலைமை தற்போது எமது நாட்டுக்கும் வந்துள்ளது.

கொரோனா நிலைமை இதற்கு ஏதுவாக இருந்தாலும் கொரோனா இதற்கு முற்றாக காரணமாக இருக்கவில்லை. உலகில் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியது.

எனினும் கொரோனா பரவியது என்பதற்காக எமது நாட்டில் போன்று எரிவாயு குழாய் வழியே வந்து அடுப்புகள் வெடிக்கவில்லை.

பசளை தொடர்பான பிரச்சினை காரணமாக எமது நாட்டில் உணவு சம்பந்தமான பிரச்சினை உருவாகியது. மத்திய வங்கியிடம் பணம் அச்சிடும் இயந்திரம் இருக்கின்றது என்பதற்கான நினைத்த நேரத்தில் பணத்தை அச்சிட்டு அரசாங்கத்திற்கு வழங்க முடியாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி