உலக சுகாதார அமைப்பு (WHO) கொவிட் வைரசின் ஐந்தாவது அலை உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக  எச்சரித்துள்ளது, ஆனால் சுகாதார அமைச்சர் வரவுசெலவு திட்டத்தில் சுகாதார சேவைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செலவினங்கள் தொடர்பான குழு விவாதத்தில் கலந்து கொண்ட, முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன நேற்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) 32 பிறழ்வுகளை ஏற்படுத்தும் உலகளாவிய தொற்றுநோயான கொவிட் வைரஸின் ஐந்தாவது திரிபு ஓமிக்ரானை அடையாளம் கண்டுள்ளது.

இவ்வாறான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள போதிலும் ராஜபக்ச அரசாங்கம் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துக்கான ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 70 பில்லியனுக்கும் அதிகமான தொகையை குறைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 301 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை அது 234 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொவிட் இறப்பு எண்ணிக்கை 14,305 ஆக உள்ளது, மேலும் 500,000 க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

"தடுப்பூசியின் தாமதம் மற்றும் விஞ்ஞான முறையற்ற தம்மிக பாணி, சுதர்ஷினி பாணி, ரித்திகல பாணி போன்ற அறிவியலற்ற முறைகளை கையில் எடுத்ததால், தடுப்பூசியின் அடிப்படையில் உலகில் 39 வது இடத்திலும்,கொவிட் 19 பரவலில் மோசமான நாடுகளில் 58 வது இடத்திலும் நாம் உள்ளோம் மற்றும் முட்டிகளையும் ஆற்றில் விட்டடோம்,'' என முன்னாள் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அதிகப்படியான மரணம்

அவர் கூறுகையில் தெற்காசிய நாடுகளில் கொவிட் இறப்பு எண்ணிக்கையை ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கான கணக்கெடுப்பிற்கு அதிக எண்ணிக்கையிலான கொவிட் மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக கூறினார்.

ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு பாகிஸ்தானில் 126, பங்களாதேஷில் 160, ஆப்கானிஸ்தானில் 182, இந்தியாவில் 334, மாலத்தீவில் 442, இலங்கையில் 664 என கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், அரசாங்க வைத்தியசாலைகளில் தற்போது பாம்பு கடி எதிர்ப்பு மருந்துகள் 5, எய்ட்ஸ் நோயாளர்களுக்கான ஐந்து மருந்துகளும், இருதய நோயாளர்களுக்கான ஒரு மருந்தும், நரம்பியல் நோய்களுக்கான மூன்று மருந்துகளும், புற்று நோயாளர்களுக்கான ஐந்து மருந்துகளும் மற்றும் சிறுநீரக மருந்துகளுக்கும் அரசாங்க வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு உள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெட்டு விழுந்துள்ளதால், எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்,” என அவர் எச்சரித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி