யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் கடற்படையினரை ஈடுபடுத்தி தனியார் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சியை பெண்கள் உட்பட பிரதேச மக்கள் தோற்கடித்துள்ளனர்.

இதற்காக கடற்படையினர் இரு நாட்களில் மூன்று முறை முயன்ற போதிலும் மக்கள் எதிர்ப்பு காரணமாக அரச நில அளவையாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு யாழ்ப்பாணம் மாதகல் கிழக்கு குசமந்துறை பிரதேசத்தில் சிறு காணித் துண்டில் சிறு பிள்ளைகள் உள்ள ஒரு தந்தையின் காணியை வலுக்கட்டாயமாக கைப்பற்றும் நோக்கத்தில் செயற்பட்ட கடற்படையினர் காணியை வழங்க விருப்பமென கடிதமொன்றில் ஒப்பமிடுமாறு மிரட்டியுள்ளனர்.

இந்தக் காணியை அளப்பதற்காக அரச அளவையிலாளர்கள் வந்த சமயத்தில் அவர்கள் வந்த வாகனத்தை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தமையால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். பின்பு கடற்படை காவல் நிலையத்தின் முன்பாக கூடிய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வலுக்கட்டாயமாக காணி அபகரிக்கப்படும் முயற்சி தோல்வியில் முடிந்தது

ds

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி