கவிதைத் தொகுப்பை எழுதியதற்காக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜஸீம் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினருடன் இணைந்து அஹ்னாப் ஜஸீமுக்கு எதிரான வழக்கு நவம்பர் 15 திங்கட்கிழமை புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படடது.

மன்னார் தமிழ் வாசகர் வட்டத்தில் பிரபல இளம் கவிஞர் அஹ்னாப் ஜசீம் சார்பாக வாதாடும் சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர, பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தனது கட்சிக்காரருக்கு எதிராக சதி ரீதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக ஜே.டி.எஸ் இணையத்தளத்திடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள அஹ்னாப் மற்றும் அவரது சட்டத்தரணியாக செயற்படும் தமக்கும் தெரிவிக்காமல் CTU சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கைகோர்த்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணி வில்சன் ஜயசேகர ஜே.டி.எஸ் இணையத்தளத்திடம் மேலும் கூறுகையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆரம்பத்திலிருந்தே அஹ்னாப்பை சிறையில் அடைக்க விரும்பியதாகவும், அதற்காக முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் கூறினார்.

விசாரணை திகதிகள் மற்றும் கவிஞருக்கு பிணை வழங்குவது தொடர்பான சட்டமா அதிபரின் கருத்து எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள விசாரணையின் போது அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

2017 இல் வௌிவந்த 'நவரசம்' கவிதைதொகுப்பு மூலமாக, 'தீவிரவாத' கருத்துக்களை தனது மாணவர்கள் பின்பற்றவைக்க முயற்சித்தார் என்று குற்றம்சுமத்தி அஹ்னாஃப் ஜசீமை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) கைது செய்வதற்கு காரணமாக அமைந்தது.

அவர் மே 16, 2020 அன்று கைது செய்யப்பட்டார் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி