ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையொப்பமிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

2251/30 வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

1. கலகொடஅத்தே ஞானசார தேரர்

2. பேராசிரியர் தயானந்த பண்டா

3. பேராசிரியர் ஷாந்திநந்தன விஜேசிங்க

4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன

5. N.P. சுஜீவ பண்டிதரத்ன

6. சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன

7. சட்டத்தரணி சஞ்சய மாரம்பே

8. எரந்த நவரத்ன

9. பானி வேவல

10. மொஹமட் மௌலவி

11. விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப்

12. கலீல் ரஹ்மான்

13. அசீஸ் நிசார்தீன் ஆகியோர் இந்த செயலணியில் உறுப்பினர்களாவர்.

இலங்கையில் ஒரே நாடு மற்றும் ஒரே சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டமூலங்களை ஆய்வு செய்து வரைவு செய்யும் பணியை இந்த செயலணி கொண்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக நீதி அமைச்சு தற்போது தயாரித்து வரும் வரைவுகள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து, அவற்றின் பொருத்தத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும், பொருத்தமற்றதானால் தொடர்புடைய வரைவில் திருத்தங்களைச் செய்யவும் பணிக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

இந்தக் குழு மாதத்திற்கு ஒருமுறை ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இறுதி அறிக்கை அடுத்த வருடம் பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BBS உறுப்பினர்கள்:

IMG 20211027 WA0002

எரந்த நவரத்ன

'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஞானசார தேரரின் பொதுபல சேனாவின் கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுபல சேனாவின் பேச்சாளர் எரந்த நவரத்னவும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொதுபல சேனா சமூக ஊடக வலையமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

மேலும், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சில காலமாக உதவிய பல முஸ்லிம்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்பு 2015 பொதுத் தேர்தலில் 'ஒரு நாடு - ஒரே சட்டம் ' என்ற தொனிப்பொருளில் போட்டியிட்டது.

விமல் அணிக்கு மாற்றீடு!

இவ்வாறான ஜனாதிபதி ஆணைக்குழுவை அவசரமாக நியமித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சில அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், விமல் வீரவங்ச மற்றும் ஏனைய அரசாங்கத்தின் கூட்டாளிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால், ராஜபக்ஷக்களின் சிங்கள பௌத்த சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதியின் எண்ணம் மீளவும் தொடங்கும் இதற்கு பொதுபல சேனா கடமையாற்றும்

அத்துரலியே ரத்ன தேரரை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி எதிர்காலத்தில் கலகொட அத்தே ஞானசார தேரரை பாராளுமன்றத்திற்கு அழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உர இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடிகளுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்பும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி