Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

4ஆம் திகதி வடக்குக்கு செல்லும் ஜனாதிபதி 4 நாட்கள் தங்கியிருந்து தொடர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்

T

The Leader Desk

டிசம்பர் 31, 2023 • 6:32 AM

4ஆம் திகதி வடக்குக்கு செல்லும் ஜனாதிபதி 4 நாட்கள் தங்கியிருந்து தொடர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • இதற்கமைய எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.
  • அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார்.
  • ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ்.
எழுத்து அளவு:

சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார்.

5ஆம் திகதி காலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும்,

மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் அவர் கலந்துகொள்கின்றார்.

6ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து,

10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...