Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் புலனாய்வு அமைப்புகளுக்கு 4 முறை வந்த தகவல்

T

The Leader Desk

டிசம்பர் 8, 2023 • 11:58 AM

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் புலனாய்வு அமைப்புகளுக்கு 4 முறை வந்த தகவல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகளுக்கு நான்கு தடவைகள் அறிவித்திருந்ததாக, அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றாதவர்கள் தொடர்பில் இதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
  • புலனாய்வு அதிகாரிகள் சரியாகச் செயற்பட்டார்களா இல்லையா என்பது குறித்த தகவலின்படி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எழுத்து அளவு:

தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகளுக்கு நான்கு தடவைகள் அறிவித்திருந்ததாக, அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புலனாய்வு அதிகாரிகள் சரியாகச் செயற்பட்டார்களா இல்லையா என்பது குறித்த தகவலின்படி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இதன்படி, இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலாந்த ஜயவர்தன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சேனவிரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி கலங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் அவ்வாறானதொரு சம்பவம் எனவும், ஈஸ்டர் தாக்குதல் ஒரு பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்டதாகவும், சஹ்ரானை கையாளும் வெளிநாட்டு வலையமைப்பு தொடர்பில் புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது தொடர்பில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றாதவர்கள் தொடர்பில் இதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு பதிலளித்தார். ஆனால் இந்த பதிலில் திருப்தி இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் நாளில் பதிலளிப்பார் என அவைத் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...