இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மூன்று பெண் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றி வந்த ஏ.ஆர். ஜயசுந்தர, என்.டி. செனவிரட்ன மற்றும் டபிள்யூ.ஜே. பத்மினி ஆகியோர் இவ்வாறு பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் தற்பொழுது நான்கு பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவை மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் திறமையும் தகுதியும் உடைய பெண் அதிகாரிகள் பொலிஸ் மா அதிபர்களாகப் பதவி வகிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி