தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி, குழந்தைகளை மேலே போட்டுப் பிடித்து புதுமையாகக் கொஞ்சி விளையாடுவார்கள். ஜனாதிபதிக்கு,பிரதமருக்கு அந்த தருணத்திலிருந்த அந்த அன்பு, அந்த கருணை, அந்த கொஞ்சல் இப்பொழுது எங்கே? என உலபனே சுமங்கல தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

81 நாட்கள் எந்தவொரு கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வீட்டிலிருந்த பிள்ளைகளுக்காக இந்த அரசாங்கம் என்ன செய்தது? ஆசிரியர்,அதிபர்கள் முன்னெடுத்துச் செல்லும் நியாயமான போராட்டத்திற்கு அரசாங்கம் வழங்கிய தீர்வு என்ன? என்ன தீர்வை வழங்க முயற்சித்தார்கள்? என்று இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

அனைத்திற்கும் முதல் பிள்ளைகள் என்றால், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைகளை முதலில் கட்டாயம் தீர்க்கவேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் இன்று என்ன செய்கின்றது? சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களை வைத்து இந்த அரசாங்கம் அதிபர், ஆசிரியர்களுக்கு, தொழிற்சங்க தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி