கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக புதிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு வற்புறுத்தி பல்வேறு அமைப்புகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

‘இலவசக் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்க’த்துடன் 43 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஓப்பமிட்டுள்ள இந்த அறிக்கையில், கொத்தலாவல சட்டமூலத்தை வாபஸ் வாங்குமாறும், சட்டமூலத்தை எதிர்த்தவர்கள் மீது பொய் குற்றங்களை சுமத்தி சிறையிலடைத்தல் மற்றும் கொரோனா நோயாளர்களாக ஆக்கும் முயற்சியை நிறுத்திவிடுமாறும் வற்புறுத்தப்பட்டுள்ளது.

கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்தமையால் 5 செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரில் மூவருக்கு கொரோனா தொற்றியிருப்பதாக நேற்று செய்திகள் வந்தன. ஏனைய செயற்பாட்டாளர்களுக்கும் தேவையான சுகாதார வசதிகள் மற்றும் உரிமைகளை வழங்காதிருக்கும் நிலை உள்ளதாகவும், சட்டத்தரிணிகளுடனான சந்திப்பின் போது கூட இடையூறு செய்தல் மற்றும் அனாவசிய தலையீடுகள் நடப்பதாக குற்றங்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்தமையால் பலிவாங்குவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி ‘இலவசக் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்’ உட்பட அமைப்புகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கை:

கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த மாணவர் – தொழிலாளர் தலைவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துக!

‘சர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகம்’ என்ற பெயரில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சட்டமூலத்திற்கு சமூகத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொத்தலாவல சட்டமூலம் என்பது ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் சம்பந்தப்பட்ட சட்டமூலமல்ல. ஒட்டுமொத்த கல்வித்துறையையும் பாதிக்கக் கூடிய சட்டமூலமாகும். இதன் மூலம் தனியார் பல்கலைக் கழகங்களையும், தனியார் பாடசாலை வலைப்பின்னலையும் நிர்மாணித்து கல்வியை விற்க அரசாங்கம் முயற்சிக்கிறது. மாத்திரமல்ல, இராணுவத் தலைவர்களைக் கொண்ட நிர்வாக சபையொன்றின் ஊடாக கல்வியை இராணுவமாக்குவதற்கான முயற்சிதான் இது.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக பாராளுமன்றத்தில் இருமுறை விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கத்திற்கு அதனை பிற்போட நேர்ந்தது. அந்த சமூக எதிர்ப்பை உருவாக்குவதற்காக அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும், இலவசக் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கமும் தலைமையேற்றன. இந்த போராட்டம் காரணமாக இலவசக் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட மாணவர் தலைவர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோரை இலக்கு வைத்து கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 08ம் திகதி பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர் செயற்பாட்டாளர்கள் உட்பட 32 பேர் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கினாலும், தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்களில் 16 பேரை முல்லைத்தீவு இராணுவ முகாமொன்றில் பலவந்தமாக தடுத்து வைத்தனர். அது முழுமையான சட்ட விரோத செயலாகும். பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டம் எதிர்ப்புகளை அடக்குவதற்காக பயன்படுத்துவதாகும். இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடு உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு வற்புறுத்தி போராடிய ஆசிரியர்களையும், வேறு பொதுவான மக்கள் எதிர்ப்புகளில் ஈடுபடுபவர்களையும் கைது செய்து வழக்கு தொடுக்கப்படுகிறது.

ஓகஸ்ட் 3ம் திகதி பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. அதன் பின்னர் அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்படுவதும், கடத்தப்படுவதும், சிறைப்படுத்துவதும் தொடங்கியது. அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப, ரஜரட்ட பல்கலைக் கழக மாணவர் செயற்பாட்டாளர் ஹேஷான் ஹர்ஷன, தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் சமீர கொஸ்வத்த, மாணவர்- மக்கள் இயக்கத்தின் ஹன்சமாலி ஆகியோர் ஏற்கனவே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் சம்பந்தமாக கீழ்வரும் விடயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 31ம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதாவது, சுமார் ஒரு மாத காலம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதுதான் அரசாங்கத்தின் தேவையாக உள்ளது. இதற்கு சிறந்த சான்றுதான் இந்த வழக்கில் தொடுக்கப்பட்டுள்ள குற்றங்கள். பிரதான குற்றமானது பொது சொத்தக்களுக்கு சேதம் விளைவித்தமை. இங்கு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை என்பது காட்போட்டினால் வடிவமைக்கப்பட்ட சவப்பெட்டி மாதிரியை கொளுத்தியதன் காரணமாக பாதையை சேதப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தி;ல் மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள், வெள்ளைத் துணி மோசடி, சதொச பணம் கொள்ளையிடல், சீனி வரி மோசடி, தமது தாய் தந்தையின் கல்லறைகளுக்கு மக்கள் பணத்தை செலவி;ட்டமை போன்றவற்றோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் போது, மனிதக் கொலைகளுக்கு குற்றவாளியாக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அரச நிறுவனத்தில் பதவி வழங்கும்போது, காட்போட்டை எரித்ததால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி பிணை கூட மறுக்கப்பட்டுள்ளது. பிணை வழங்காமை மற்றும் சிறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பொது சொத்துக்கள் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளமை இதன் மூலம் தெரிகிறது.

உத்தியோகமற்ற குழுக்களின் மூலம் கடத்தப்பட்டே இந்த கைதுகள் நடந்துள்ளன. ஜயவர்தனபுர மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீப பல்கலைக் கழகத்தின் முன்பாக வாகனமொன்றில் வந்த சிலரால் கடத்தப்பட்டு, ஒரு இடத்தில் தடுத்து வைத்திருததன் பின்னர் தலங்கம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். ஒகஸ்ட் 05ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் பங்கேற்றுவிட்டு மீண்டும் பல்கலைக் கழகத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்த விரிவுரையாளர்களையும் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்தை நிறுத்தி தம்மை பொலிஸார் எனக் கூறிக் கொண்ட சிலர் பேருந்திலிருந்த விரிவுரையாளர் அமிந்த லக்மால் என்பவரை கைது செய்ய முயன்றனர். இந்த சம்பவம் செய்திகள் ஒலிபரப்பப்படும்போது நேரடி காட்சிகளாகவும் காட்டப்பட்டன. ரஜரட்ட பல்கலைக் கழகத்தின் ஹேஷான் ஹர்ஷன கூட சிவில் உடையில் வீட்டுக்கு வந்த சிலரால் கைது செய்யப்பட்டார்.

ஒகஸ்ட் 03ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்பு அதற்கு தலைமை வழங்கிய, நேரடியாக செயற்பட்ட மாணவர் தலைவர்கள், பல்கலைக் கழக விரிவுiரையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், வெகுசன அரசியல் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து, திட்டமிட்டு கைது செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு சிறந்த சான்றுதான் கைது செய்யப்படவிருப்பவர்கள் சம்பந்தமாக பொலிஸார் இதுவரை நீதிமன்றத்திற்கு சரியான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்பது. அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான உதார சந்தருவனின் வீட்டுக்கும், அவர் தங்கியிருந்த இடங்களுக்கும் சென்ற பொலிஸ் குழுக்கள் பலவந்தமாக சோதனையிட்டு, அவர் சரணடையவில்லையென்றால் வீட்டிலுள்ளவர்களை கைது செய்ய நேரிடுமென மிரட்டியுள்ளனர். தோழர் உதார சந்தருவனின் தந்தை வைத்தியசாலையில் இருக்கும் போது அவருக்கு உதவியாக வைத்தியசாலையில் இருந்த திறந்த பல்கலைக் கழகத்தின் தோழரொருவரை பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலமளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் சத்துர சமரசிங்கவினது சகோதரரின் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு மற்றும் பணியாற்றும் இடத்திற்கு பொலிஸார் திடீரென நுழைந்துள்ளனர்;. பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் சம்மேளத்தின் பிரதிநிதியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விரிவுரையாளர் மஹிம் மெண்டிஸ் அவர்களை தொலைபேசி ஊடாக மிரட்டியுள்ளனர். அரசாங்கத்தின் உத்தியோகமற்ற மற்றும் உத்தியோக ரீதியான குழுக்கள் மாணவர் தலைவர்களையும், தொழிலாளர் தலைவர்களையும் பின்தொடர்ந்த வண்ணமுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்கும்போது, சிறைப்படுத்தப்பட்டுள்ள ஆட்கள் விடயத்தில் சட்ட உதவிகளை பெற்றுக் கொள்வதிலும்;, அத்தியாவசிய மருந்துகள் உட்பட பொருட்களை வழங்குவதில் இடையூறு செய்ததும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்குள் மறைந்துக் கொண்டுதான். சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குரிய தல்தென தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அ.ப.மா.ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, ஜனவர்தனபுர பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீப மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் சமீர கொஸ்வத்த ஆகியோருக்கு உயர்நீதிமன்ற பிணை விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களில் ஒப்பம் பெற்றுக் கொள்வதற்காக சட்டத்தரணிகளை சந்திக்கக் கூட வாய்ப்பளிக்கவில்லை. பெருந்தொற்று பரம்பல் சம்பந்தமான பிரச்சினை இருக்குமாயின், அந்த நிலையை கவனத்தில் கொண்டு அத்தியாவசிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார திட்டமொன்றை வகுக்க வேண்டும். அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர் தமது விடுதலைக்கான காரணங்களை தெரியப்படுத்தவும், அதற்கான சட்ட உதவிகளை பெறவும் உள்ள உரிமை மீறப்படக் கூடாது. சிறைச்சாலை போன்ற ஒரு இடத்தில் தொற்றுநோய் நிலையில் பிணை எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். நாட்டின் அடிப்படை சட்டத்தில் கூட உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டம் இருக்க முடியாது. அதேபோன்று, எந்தவொரு சந்தேக நபருக்கும் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

வெளி நபர்களிடமிருந்து தொற்றுநோய் சிறைச்சாலைகுள் வருவதை தடுப்பதாகக் காட்டி சட்டத்தரணிகளையாவது சந்திக்க சந்தர்ப்பம் வழங்காத அரசாங்கம் வெகுசன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்படும் செயற்பாட்டாளர்களை ஜனநாயத்திற்கு முரணாக கைது செய்து சிறையில் அடைப்பதைக் கொண்;டு அவர்ளை தொற்று நோய்க்கு இரையாக்கும் முயற்சியை நாம் வன்மையாக எதிர்க்கிறோம்.

மாணவர்கள், தொழிற்சங்கங்கள் உட்பட போராடும் சக்திகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இந்த அடக்குமுறையை நாம் அனைவரும் வெறுப்புடன் கண்டிக்கிறோம். அதேபோன்று,

தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள மாணவர் – தொழிலாளர் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், கடத்தப்படுதல், சிறைப்படுத்தல், கைது செய்தல் மற்றும் வழக்கு தொடுக்கப்படுதலை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். மாத்திரமல்ல, மக்கள் எதிர்ப்பிற்கு செவிமடுத்து கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக சுருட்டிக் கொள்ள வேண்டுமெனவும் வற்புறுத்துகிறோம்

இங்ஙணம்,

1. பேராசிரியர் சியாமா பன்னஹக – தலைவர், பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம்.

2. ஜோசப் ஸ்டாலின் – பிரதான செயலாளர், இலங்கை ஆசிரியர் சங்கம்.

3. சன்ன திசாநாயக – தலைவர், இலங்கை வங்கி ஊழியர் சங்கம்

4. ரியன்ஸி விஜேமான்ன – பிரதித் தலைவர், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்.

5. துமிந்த நாகமுவ – அமைப்புச் செயலாளர், தொழிலாளர் போராட்ட மத்தியநிலையம்.

6. சிறிநாத் பெரேரா – பிரதான செயலாளர், சுதந்திர தொழிற்சங்க மத்தியநிலையம்.

7. கே.எம்.பி. லக்மால் – தலைவர், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையம்.

8. லீனஸ் ஜயதிலக – தலைவர், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம்

9. சின்தக ராஜபக்ஷ – நடவடிக்கையாளர், காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு இயக்கம்.

10. தர்மசிரி லங்காபேலி – பிரதான செயலாளர், ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம்.

11. எச.;ஐ.லசந்த – துணை ஒருங்கிணைப்பாளர், சுயாதீன தடாக ஊழியர் சங்கம்

12. மயுர சேனாநாயக – செயலாளர், இலங்கை பிரகதி ஆசிரியர் சங்கம்

13. மஹிந்த ஜயசிங்க – செயலாளர், இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம்.

14. யல்வெல பஞ்ஞாசேகர தேரர் – தலைவர், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்

15. டப்.என்.மெண்டிஸ் – தலைவர், அரச அச்சக கலைஞர்கள் சங்கம்.

16. இசாந்த தெல்கந்துர ஆரச்சி – தலைவர், பயிலுநர் கல்வியியல் பீடம், பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

17. மருத்துவர் விபுல விக்ரமசிங்க – பொதுச் செயலாளர், அரச பல் சிகிச்சை மருத்துவ அதிகாரிகள்சங்கம்.

18. ஜி.டி.தஹநாயக – தலைவர், இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம்.

19. ஜகத் ஆனந்த சில்வா – செயலாளர், சுயாதீன கல்வி ஊழியர் சங்கம்.

20. ஜே.பி. குருசிங்க – இணைச் செயலாளர், தகவல் தொலைதொடர்ப்பு அனைத்து ஊழியர் சங்கம்.

21. பிரியந்த விக்ரமசிங்க – செயலாளர், ஜனபல பவுர.

22. தேம்பிட்டியே சுகதானந்த தேரர் – பிரதான செயலாளர், ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம்.

23. வசந்த கருணாதிலக – செயலாளர், ஒன்றிணைந்த பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர் சங்கம்.

24. சஞ்சீவ பண்டார – செயலாளர், இணைந்த ஆசிரியர் சேவைகள் சங்கம்.

25. விதர்ஷன கண்ணங்கர – செயலாளர், பிரக்ஸிஸ் குழுமம்.

26. ரிவிஹார பின்னதூவ – உறுப்பினர், இளைய சட்டத்தரணிகள் சங்கம்.

27. மருத்துவர் நிலான் பர்னாந்து – அமைப்புச் செயலாளர், சுகாதார ஊழியர் மத்திய நிலையம்.

28. கெலும் பிரியந்த – தலைவர், பொறியியல் சேவைகள் தொழில் நிபுணர்களின் சங்கம்

29. தென்னே ஞானானந்த தேரர் – ஒருங்கிணைப்பாளர், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்.

30. சரத் கஹகல்ல- பிரதான செயலாளர், சுயாதீன இலங்கை ஆசிரியர் சங்கம்.

31. நந்தன ஜயரத்ன – செயலாளர், ஒன்றிணைந்த புகையிரத ஊழியர் சங்கம்.

32. சந்திமால் விஜேரத்ன – பிரதான செயலாளர், இலங்கை சுயாதீன ஆசிரியர் சேவைகள் சங்கம்.

33. மருத்துவர் கிஷாந்த – தலைவர், அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.

34. வை.பி. ஜயசேகர – செயலாளர், ஒன்றிணைந்த நீர் வழங்கல் ஊழியர் சங்கம்.

35. சுதந்த மாதவ – இணை அமைப்பாளர், புதிய சமுதாயம் (அலுத் பரபுர)

36. அநுர குணரத்ன – ஒருங்கிணைப்பாளர், உண்மை மற்றும் நீதிக்கான பிரஜைகள்

37. அஜித் பிரசன்ன – செயலாளர், ஒன்றிணைந்த துறைமுக ஊழியர் சங்கம்.

38. மஹேஷ் குணதிலக – தலைவர், ஒன்றிணைந்த தாதியர் சேவைகள் சங்கம்.

39. உதேனி திசாநாயக – தலைவர், அகில இலங்கை முகாமைத்துவ சேவைகள் அதிகாரிகள் சங்கம்

40. சமிந்த பெரேரா – பிரதி செயலாளர், இலங்கை தொழிற்சங்க சம்மேளனம்.

41. தரிந்து பிரசாத் – ஒருங்கிணைப்பாளர், அனைத்து உயர் தேசிய கணக்காய்வு டிப்லோமா பாதுகாப்பு மாணவர் கூட்டமைவு

42. இமேஷ் சங்கீத் – ஒருங்கிணைப்பாளர், மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழு.

43. கல்வெவ சிறிதம்ம தேரர் – ஒருங்கிணைப்பாளர், அனைத்துப் பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியம்.

இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்திற்காக,

உதார சந்தருவன்

பதில் ஒருங்கிணைப்பாளர், அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி