தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு வீடு சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை தடுப்பூசி போடப்படாத இவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு அனைத்து பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறினார்.

மேலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்கள இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு செல்லுமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்.

இதற்கிடையில், ஜனாதிபதி நேற்று சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.30 வயதுக்கு மேற்பட்ட எவரும் இரண்டாவது மருந்தை செலுத்தும் எந்த மையத்திலிருந்தும் முதல் டோஸைப் பெற வசதி செய்ய வேண்டும்.

அது தடுப்பூசி மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்த கொவிட் ஒழிப்பு சிறப்பு குழுவினருடனான கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் இரண்டு தடுப்பூசிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது டோஸுக்கு கூட அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

எனினும், நோய் பரவுவதைத் தடுக்க பொதுமக்களின் ஆதரவு இல்லாதது துரதிருஷ்டவசமானது என்று வைத்தியர் பிரசன்ன குணசேன கூறினார்.

தடுப்பூசி பெற 50,000 இலவச பயணங்கள்

இதற்கிடையில், தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்த போக்குவரத்து சிரமம் உள்ளவர்களுக்கு 50,000 இலவச பயணங்கள் வழங்குவதற்கான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய இலங்கை செஞ்சிலுவை சங்கம் (SLRCS) மற்றும் Uber Sri Lanka (UBER SRI LANKA) இணங்கியுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் கொவிட் சிகிச்சை கடமைகள் குறித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான இலவச போக்குவரத்துத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

(UBER SRI LANKA) மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க தலைமையில், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தனர்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி