வன விலங்குகளால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்பைத் தடுக்க நிலையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்ற, சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை இரட்டிப்பாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு வனவிலங்குகளான யானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருதுகள் மற்றும் முதலைகள் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் மற்றும் முழுமையான அல்லது பகுதியளவில் அங்கவீனமுறும் நபர்களுக்கும், வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்கும் தற்போது செலுத்தப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகைகளை கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்வதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவை பின்வருமாறு

  • உயிரிழப்புக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 இலட்சம் ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 இலட்ச ரூபாய்கள் வரை அதிகரித்தல்.
  • முழுமையான அங்கவீனத்திற்கு ஆளாகும் நபரொருவருக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 05 இலட்ச ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை பாலின வேறுபாடோ அல்லது வயது வேறுபாடோ இன்றி 10 இலட்ச ரூபாய்கள் வரை அதிகரித்தல்.
  • பகுதியளவில் அங்கவீனமுறும் அல்லது உடல் காயங்களுக்கு ஆளாகின்றவர்களுக்கு இதுவரை செலுத்தப்பட்டு வந்த 75,000/- ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை 150,000/- ரூபாய்கள் வரை அதிகரித்தல்.
  • காட்டு யானைகளின் தாக்குதல்களால் இடம்பெறும் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதங்களுக்காக இதுவரை செலுத்தப்பட்டு வந்த ஒரு இலட்ச ரூபாய்கள் இழப்பீட்டுத் தொகையை அதிகபட்ச 02 இரண்டு இலட்ச ரூபாய்கள் வரை அதிகரித்தல்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் யானை-மனித மோதல்

இலங்கையில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் பத்தொன்பது இடங்களில் யானை-மனித மோதல்கள் காணப்படுவதை அரசாங்கம் அண்மையில் ஒப்புக்கொண்டது.

இலங்கையின் 19 மாவட்டங்களில் உள்ள 133 பிரதேச செயலகப் பிரிவுகளில் தற்போது யானை-மனித மோதல்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

 117595063 01

இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த, வனவிலங்கு பாதுகாப்பு அதிகார சபை, பாதுகாப்பு வேலிகள் மற்றும் மின்சார வேலிகளை உருவாக்குவதோடு, இந்த வேலிகளுக்கு ஒதுக்கப்பட்ட தண்டவாளங்களை பயன்படுத்த கடந்த வருடம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கடந்த வருடம் நவம்பரில், 133 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்கனவே சுமார் 4,500 கிலோமீற்றர் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது, மேலும் 1,500 கிலோமீற்றர்  மின் வேலிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட யானை தடுப்பு மத்திய நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது.

இந்த வேலிகளை அமைக்க தற்போது மர தூண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், அவை பெரும்பாலும் காட்டு யானைகளால் தள்ளி வீழ்த்தப்படுகின்றன. இதற்கு மாற்றீடாக கொன்கிரீட் தூண்களைப் பயன்படுத்தினால் அதனை மீளமைப்பது சாத்தியமற்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், மாற்று தீர்வாக பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட தண்டவாளங்களைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது

ரயில்வே துறையின் பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட பீளிகளை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்ள வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட முயற்சிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

2020இல் ஜனாதிபதியின் ஆலோசனை

காட்டு யானைகளைத் தாக்குவதற்குப் பதிலாக, காடழிப்புக்கான ஒரு முறையை வகுத்து, இரண்டு வருடங்களுக்குள் மனித-யானை மோதலுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த வருடம் ஒக்டோபரில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மனிதனையும் யானையையும் பாதுகாக்கும் விரைவான மற்றும் நிரந்தர தீர்வைக் கண்டறிவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மனித நடவடிக்கைகள் காரணமாக யானைகள் வாழ்விடங்களை இழந்துள்ளன யானைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

 2019 ஆம் ஆண்டில் காட்டு யானை வேட்டையாடியதால் 122 பேர் உயிரிழந்துள்ளதோடு, 407 யானைகள்  உயிரிழந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரச கணக்கு குழுவின் அறிக்கை

இலங்கையின் நாடாமன்றத்தின்  அரச  கணக்குக் குழுவின் அறிக்கைக்கு அமைய, யானை மற்றும் மனித மோதலால் அதிக யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 272 யானைகள் உயிரிழக்கின்றன.

மேலும், யானை-மனித மோதல் காரணமாக வருடாந்தம் சராசரியாக 85 மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டில், இலங்கையில் யானை-மனித மோதல்களால் 327 யானைகளும் 113 மனிதர்களும் இறந்துள்ளனர்.

வனவிலங்கு பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைக்கு அமைய, 2019 ஆம் ஆண்டு இலங்கையில் மிக மோசமான யானை-மனித மோதல் இடம்பெற்ற ஆண்டாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு இறுதியாக யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த தரவுகளுக்கு அமைய இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 5,879 ஆகும். அவற்றில் 55 யானைகள் நீண்ட தந்தங்களுடன் காணப்பட்டன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி