கொரோனா வைரஸ் கட்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலனியை நீக்கிவிட்டு,  அதன் பணிகளை அமைச்சரவைக்கு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவோமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  டெல்டா வகைக் கொரோனா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பா முழுவதும் பரவியுள்ளது. அஸ்ட்ராசெனிக்கா நூற்றுக்கு 60 அல்லது 65 சதவீதமே பாதுகாப்பளிக்கும். பைஸர் தடுப்பூசி இதனை விட குறைவு எனவும் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இது ஆரம்பம் மட்டுமே இந்த வைரஸ் எவ்வாறு பரவுமென எவருக்கும் தெரியாது. கொரோனா வைரஸ் கட்டுபடுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்  தொடர்பான ஜனாதிபதி செயலனி இருக்கும் வரையில் கொரோனா வைரஸை வேடிக்கை மாத்திரமே பார்க்க முடியும். மக்கள் உயிரிழப்பார்கள். எனவே அதனை நீக்கிவிட்டு கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகளை அமைச்சரவைக்கு வழங்கி, விசேட குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு அதனை கட்டுப்படுத்த முடியாமையே காரணம். இதுவொரு தேசிய பிரச்சினை எனவும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி