சர்வதேச சமூகத்தின் முன் உள்ள அனைத்து சாதகமான அம்சங்களும் நேற்றைய சம்பவங்கள் மூலம் கழுவப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு யாரையும் வலுக்கட்டாயமாக அனுப்புவது சட்டத்திற்கு எதிரானது என இன்று நாடாளுமன்றத்தில் பேசிய ரணில், தற்போதுள்ள சட்டங்கள் தனிநபர்களை காரணமின்றி தனிமைப்படுத்த அனுமதிக்காது என்பதை சுட்டிக்காட்டினார்.

தொழிற்சங்கத் தலைவர் ஜோஷெப் ஸ்டாலின் ஒரு முக்கிய நபர் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழற்சங்கம் என்றும், இந்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு முன் எழுப்பப்படும் என்றும் கூறினார்.

மேலும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பொலிஸாரின் நடவடிக்கைகளை விசாரிக்க ஒரு குழுவை நியமிக்கவும் நிதி அமைச்சரிடம் அழைப்பு விடுத்தார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என குறிப்பிட்ட ரணில் , முல்லைத்தீவு அல்லது வேறு எந்த இடத்திலும் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒருவரை கொண்டு செல்ல தனிமைப்படுத்தல் சட்டத்தில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை என்றும் கூறிய ரணில், விதிமுறைகள் வகுக்கப்படும்போது, ​​அது அடிப்படை உரிமைகளுக்கு ஏற்ப செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி