Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சிவப்பு பச்சரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு

T

The Leader Desk

டிசம்பர் 31, 2024 • 11:27 AM

சிவப்பு பச்சரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நடவடிக்கை எடுக்கம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
  • அரிசி இறக்குமதிக்கான கால எல்லை டிசம்பர் 30ஆம் திகதி முதல் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை 77 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் 11 ஆயிரம் மெற்றிக் தொன் துறைமுகத்தில் உள்ளது.
எழுத்து அளவு:

நடவடிக்கை எடுக்கம் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அரிசி தட்டுபாடு தொடர்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,

“நாட்டில் அரிசிக்கு நிலவிய தட்டுப்பாடு காரணமாகவே அரிசி இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியது. அரிசி இறக்குமதிக்கான கால எல்லை டிசம்பர் 30ஆம் திகதி முதல் ஜனவரி 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 ஆயிரம் மெற்றிக் தொன் துறைமுகத்தில் உள்ளது. அவையும் நாளை அல்லது நாளை மறுதினம் விடுக்கப்படும்.

“குறிப்பிடத்தக்களவு அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும், அவற்றை விநியோகிக்கும் பொறிமுறையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். குறிப்பாக சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு உள்ளது. அந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்.

“ஜனவரி நடுப்பகுதியில் உள்நாட்டு விவசாயிகளின் அரிசி சந்தைக்கு கிடைக்கப்பெறும். அந்த விடயத்தையும் கவனத்தில் கொண்டுதான் நாம் தீர்மானங்களை எடுத்து செயல்பட்டு வருகிறோம். அரிசி இறக்குமதி செய்யப்பட்டு அவற்றை முறையாக விநியோகிகும் பொறிமுறையொன்றை பேண எதிர்பார்ப்பதுடன், சதொசவில் குறிப்பிடத்தக்களவு அரிசியை கையிருப்பில் வைத்திருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

“இவற்றுக்கு மத்தியில் உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரிசி விலையை பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும். அரிசிக்கான வரி குறைக்கப்படாமைக்கான காரணம் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே. வரி குறைப்பு செய்தால் உள்நாட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் நெல்லை வழங்க முடியாது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...