Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘புலமைப்பரிசில் பரீட்சை விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் தேவை’

T

The Leader Desk

டிசம்பர் 31, 2024 • 11:18 AM

‘புலமைப்பரிசில் பரீட்சை விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் தேவை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
  • இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
  • "வழக்கமாக, புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வழங்குவதற்கு சுமார் 40 நாட்கள் ஆகும்.
  • முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

"இன்று எனக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தது. 68 பக்க தீர்ப்பு. மிகவும் பொருத்தமான முடிவை எடுத்து அதை செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 3 விருப்பங்களில் எது மிகவும் பொருத்தமானது என்று என்னால் உடனடியாக சொல்ல முடியாது. அதை ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

"வழக்கமாக, புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வழங்குவதற்கு சுமார் 40 நாட்கள் ஆகும். முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது, அடிப்படை மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் இருந்து பொருத்தமான பரிந்துரையை தெரிவு செய்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு, நீதியரசர்கள் குழு உத்தரவிட்டிருந்தது.

இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

"மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாதக்காலங்கள் தேவைப்படுகிறது. அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வௌியிட முடியும் என நினைகிறேன்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...