Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

T

The Leader Desk

டிசம்பர் 31, 2024 • 6:20 AM

புலமைப்பரிசில் பரீட்சை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்குவதற்கான தீர்மானம் அடிப்படை மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்க - மூன்று மில்லியன் ரூபாவும் சமிந்த குமார இளங்கசிங்க - இரண்டு மில்லியன் ரூபாவும், அரசாங்கத்திற்கு நட்டஈடு செலுத்த வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு, நீதியரசர்கள் குழு உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:

வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்குவதற்கான தீர்மானம் அடிப்படை மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு, நீதியரசர்கள் குழு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்க - மூன்று மில்லியன் ரூபாவும் சமிந்த குமார இளங்கசிங்க - இரண்டு மில்லியன் ரூபாவும், அரசாங்கத்திற்கு நட்டஈடு செலுத்த வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த நீதியரசர்களான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த முடிவை அறிவித்துள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, அந்த பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று கேள்விகளுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...