Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜன. 31க்கு முன் தீர்வு

T

The Leader Desk

ஜனவரி 8, 2024 • 10:09 AM

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜன. 31க்கு முன் தீர்வு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
  • ஆம் ஆண்டு ஆரம்பமாகி 7 நாட்களுக்குள் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலகத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (07) திறந்துவைத்து உரையாற்றும் போது, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இந்த நிகழ்வில் காட்டப்பட்ட காணொளிகளில் 95 வீதமானவை தமிழில் ஒளிபரப்பப்பட்டதாக சிங்களம் மட்டுமே தெரிந்தவர்களிடம் மன்னிப்பும் கோரினார்.
எழுத்து அளவு:

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான பணிப்புரைகளை தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமான கடந்த 18ஆம் திகதி, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை வழங்குமாறும், தமிழ் ஊடகங்கள் மூலம் பணியாற்றக்கூடிய அலுவலகம் ஒன்றை வழங்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பிராந்திய அலுவலகம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஆரம்பமாகி 7 நாட்களுக்குள் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலகத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (07) திறந்துவைத்து உரையாற்றும் போது, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தான் நுவரெலியாவுக்கு வந்தபோது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடியதையும், யாழ்ப்பாணம் சென்ற போது தமிழில் தேசிய கீதத்தை பாடியதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வில் காட்டப்பட்ட காணொளிகளில் 95 வீதமானவை தமிழில் ஒளிபரப்பப்பட்டதாக சிங்களம் மட்டுமே தெரிந்தவர்களிடம் மன்னிப்பும் கோரினார். ஆனால், நாட்டில் நடக்கும் அனைத்தையும் சிங்கள மொழியில் மட்டும் செய்ததற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

சிங்களத்தை அரச கரும மொழியாக்கி மக்களைப் பிளவுபடுத்திய அரசியல்வாதிகள் அனைவரும் சபிக்கப்படுவார்கள் என தெரிவித்த மனுஷ நாணயக்கார, அந்த பிரிவினையின் காரணமாக இன்று தமிழில் கொஞ்சமும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றைக் குற்றச்சாட்டுவதை விடுத்து எதிர்காலக் குழந்தைகளுக்காக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், இம்மாத இறுதிக்குள் அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார் என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...