Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லை!

T

The Leader Desk

டிசம்பர் 30, 2024 • 5:00 PM

சுற்றுலாப் பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால், பல சுற்றுலாப் பகுதிகளில் போதுமான பொது வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
  • ஆம் ஆண்டில் சுற்றுலா இலக்கான 2 மில்லியனைத் தாண்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏற்கெனவே நாட்டுக்கு வந்துள்ளனர் என்றும் இதனால், இந்த ஆண்டு சுற்றுலா வருவாய் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என்றும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கணித்துள்ளது.
  • இவ்வாறான ஒரு நல்ல சூழல் உருவாகியுள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் எல்ல பிரதுசத்தின் நிலை மிகவும் திருப்திகரமாக இல்லை என்றும் அங்கு பல குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
  • ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ,லட்சியத்தை நனவாக்கும் வகையில், இப்பிரச்சினைகளை விரைவில் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர்.
எழுத்து அளவு:

. ஆனால், பல சுற்றுலாப் பகுதிகளில் போதுமான பொது வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மூன்றாவது பெரிய துறையாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது.

2024ஆம் ஆண்டில் சுற்றுலா இலக்கான 2 மில்லியனைத் தாண்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏற்கெனவே நாட்டுக்கு வந்துள்ளனர் என்றும் இதனால், இந்த ஆண்டு சுற்றுலா வருவாய் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என்றும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கணித்துள்ளது.

தற்போது ​​நாட்டின் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன. இது, நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது.

இவ்வாறான ஒரு நல்ல சூழல் உருவாகியுள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் எல்ல பிரதுசத்தின் நிலை மிகவும் திருப்திகரமாக இல்லை என்றும் அங்கு பல குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த சரியான இடம் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

முன்னதாக, சுற்றுலாப் பயணிகள் உணவகங்களுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு வாய்ப்பிருந்த போதிலும், அதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளமையால் பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளதாகப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு கட்டமைப்பு இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொலன்னறுவையின் தொல்பொருள் இடிபாடுகள் மற்றும் தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் பயணச்சீட்டுக் கட்டணம், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

2025ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ,லட்சியத்தை நனவாக்கும் வகையில், இப்பிரச்சினைகளை விரைவில் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...