Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

T

The Leader Desk

டிசம்பர் 30, 2024 • 1:16 PM

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.
  • பின்வரும் இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வீதியின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இலவசமாக வாகனங்களை நிறுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
  • கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெருந்தொகையான மக்களும் வாகனங்களும் நாளை காலி முகத்துவார பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எழுத்து அளவு:

அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.

கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெருந்தொகையான மக்களும் வாகனங்களும் நாளை காலி முகத்துவார பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்ட புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அதற்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலி மத்திய வீதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது எனவும், அனைத்து வாகனங்களும் பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த போக்குவரத்து திட்டம் கீழே,

கட்டணத்துடன் கூடிய தனியார் வாகன நிறுத்துமிடங்கள்

* புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பழைய மெனிங் சந்தை வளாக வாகன நிறுத்துமிடம்.

* கோட்டை- விமலதர்ம சூரிய கடிகார கோபுரம் அருகில் - சார்மன்ஸ் வாகன நிறுத்துமிடம்.  ராசிக் ஃபரித் மாவத்தை - ஹேமாஸ் வாகன நிறுத்துமிடம்.

* டி.ஆர். விஜேவர்தன மாவத்தை - லேக் ஹவுஸ் வாகன நிறுத்துமிடம்.

கொம்பெனித்தெரு - யூனியன் பிளேஸ் டோசன் தெரு சந்தி ஹெக்ஷெஷ் டவர் வாகன நிறுத்துமிடம்.

* மருதானை-காமினி சுற்றுவட்டத்திற்கு அருகில் St Clement வாகன நிறுத்துமிடம்.

பின்வரும் இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வீதியின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இலவசமாக வாகனங்களை நிறுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

* கோட்டை பொலிஸ் பிரிவின் பால தக்ஷ மாவத்தை  MOD வாகன நிறுத்துமிடம்.

* கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடலோர வீதி

* கோட்டை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவின் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை

* கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் பார்சன்ஸ் வீதி, வெளியேறும் பாதை மட்டும்.

* கோட்டை பொலிஸ் பிரிவின் லேடிங் பெஸ்டியன் மாவத்தை.

* கோட்டை பொலிஸ் பிரிவின் பிரிஸ்டல் தெரு,

* கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள டியூக் தெரு

* காலி வீதி வெள்ளவத்தை சவோய்க்கு அருகில் இருந்து காலி வீதி பகத்தலே வீதி சந்தி வரை வாகன நிறுத்துமிடங்களில் (Parkaing Bays) மட்டும்

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை தாமரை தடாகம் சுற்றுவட்டத்தில் இருந்து நூலகச் சுற்றுவட்டத்தை நோக்கி நுழையும் பாதை (இடது) .

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின்  ரீட் மாவத்தை சந்தியிலிருந்து ரீட் மாவத்தை, தர்ஸ்டன் சந்தி வரையான வீதியின் வலது பக்கம்.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் சுதந்திர வீதி, சுதந்திரச் சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரையான வீதியின் வலது பக்கம்.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் மெட்லண்ட் பிளேஸ்.

* கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் மன்றக் கல்லூரி வீதி.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...