Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘புதிய ஜனாதிபதியும் ஏமாற்றிவிட்டார்’

T

The Leader Desk

டிசம்பர் 30, 2024 • 10:50 AM

‘புதிய ஜனாதிபதியும் ஏமாற்றிவிட்டார்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
  • “ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை.
  • ஆனால் 6 மாதங்களாகியும் இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எழுத்து அளவு:

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம்பெற்றதுடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது படங்களை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“எமது பிள்ளைகள் கையளித்தும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

“அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம்.

“இதற்கு முன் இருந்த அரசுகள் எம்மை ஏமாற்றின. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட நிலையில், சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகிறோம்.

“ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை. எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.

“இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி பெற்றுக் கொடுப்பேன் என புதிய ஜனாதிபதி கூறினார். ஆனால் 6 மாதங்களாகியும் இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“ஏனைய ஜனாதிபதிகள் போன்று இவரும் ஏமாற்றுவதாகவே உணர்கின்றோம். இன்றுவரை பாதிக்கப்பட்ட எம்முடன் பேசக்கூவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியும் கண்ணீரும் எனக்கும் தெரியும் என்றார். அதன் வலி எனக்கு புரியும் என்றார். ஆனால் இன்றுவரை எந்த முயற்சியும் அவர் எடுத்திருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றபட்டே வருகின்றோம்” எனவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘புதிய ஜனாதிபதியும் ஏமாற்றிவிட்டார்’ | Tamil Leader | We Lead the Nation