Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது?

T

The Leader Desk

ஜனவரி 30, 2025 • 4:11 AM

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன.
  • சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன.
  • அந்த கொள்கலன்கள் மாகாண ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்படுகிறது.
  • அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
எழுத்து அளவு:

பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. பேச்சளவில் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுகிறது.

ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்கள் மாகாண ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்படுகிறது.

அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கொள்கலன்களை பரிசோதனை செய்யாமல் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது.

323 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான விபரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் அறிந்துக் கொள்வார்கள் என்றார்.

இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிவப்பு கொடி கொண்ட கொள்கலன்களை அனுமதித்ததில் தமக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் மறுத்துள்ளார்.

அந்த கொள்கலன்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளால் தான் வருத்தமடைந்ததாகவும் ஆளுநர் கூறினார்.

மேலும், தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதில்லை என்றும், பொதுமக்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் என்ன இருந்தது? | Tamil Leader | We Lead the Nation