Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

நாட்டில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்: நோய்கள் ஏற்பட வாய்ப்பு

T

The Leader Desk

ஜனவரி 30, 2025 • 4:08 AM

நாட்டில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்: நோய்கள் ஏற்பட வாய்ப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் காற்றின் தரம் அதிகளவில் மோசமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் குறைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவதால், உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக காற்று மாசுபாட்டினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...