வங்காள விரிகுடா பகுதியில் வீசிய காற்று சூறாவளியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் நாட்டின் மத்திய, சபரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் 150 மி. மீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யக் கூடுமென செய்திகள் கூறுகின்றன.

தற்போதைய மழை வீழ்ச்சி காரணமாக நதிப்படுகைகளில், நதிகளை அண்டிய தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடுமென நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தனகலு ஓய, களனி கங்கை, களு கங்கை, கிங்கங்கை, நில்வல கங்கையை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளது.

மேற்படி நதிகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி