Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

தென்கொரிய விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர்: 179 பேர் பலி

T

The Leader Desk

டிசம்பர் 29, 2024 • 1:01 PM

தென்கொரிய விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர்: 179 பேர் பலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், இருவரைத் தவிர அனைவரும் இறந்து விட்டதாக அந்நாட்டின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • பிஏஎல் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏர் கனடா விமானம் 2259, நியூஃபவுண்ட்லேண்டின் செயிண்ட் ஜோன்ஸிலிருந்து வந்துள்ளது.
  • மேலும் எஞ்சியுள்ள சடலங்களை மீட்க மீட்பு குழுக்கள் தொடர்ந்து தேடி வருகின்றன.
எழுத்து அளவு:

விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், இருவரைத் தவிர அனைவரும் இறந்து விட்டதாக அந்நாட்டின் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எஞ்சியுள்ள சடலங்களை மீட்க மீட்பு குழுக்கள் தொடர்ந்து தேடி வருகின்றன.

இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரில் ஒரு பயணி மற்றும் ஒரு விமான ஊழியர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24-677125f779d1e.jpg

தென்கொரிய விமான விபத்து ஏற்பட்டு சில மணிநேரங்களில் கனடாவில் ஹாலிஃபாக்ஸில் தரையிறங்கிய ஏர் கனடா விமானத்தில் தீப்பிடித்துள்ளது.

இதன்போது, பயணிகள் அதிகளவு பதற்றமடைந்துள்ள நிலையில் விமானத்திற்குள் இருந்து ஒருவர் பதிவு செய்த காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து ஹாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பிஏஎல் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏர் கனடா விமானம் 2259, நியூஃபவுண்ட்லேண்டின் செயிண்ட் ஜோன்ஸிலிருந்து வந்துள்ளது.

இதன்போது, தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் அது விமானத்தின் ஒரு பகுதி முழுவதற்கும் பரவியது.

ஆரம்ப அறிக்கைகளின்படி, விமானத்தின் டயர்களில் ஒன்று சரியாக இயங்கத் தவறியதால் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக விமானத்தின் இறக்கை ஓடுபாதையில் உரசி தீப்பிடித்துள்ளது.

எனினும் அவசரகால மீட்புக் குழுக்களால்,அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தென்கொரிய விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர்: 179 பேர் பலி | Tamil Leader | We Lead the Nation