Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

4 தசாப்த இராணுவச் சேவையிலிருந்து ஜெனரல் சவேந்திர ஓய்வு

T

The Leader Desk

டிசம்பர் 29, 2024 • 12:31 PM

4 தசாப்த இராணுவச் சேவையிலிருந்து ஜெனரல் சவேந்திர ஓய்வு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதானி மற்றும் இலங்கை இராணுவ செயற்பாட்டு சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
  • தசாப்தங்களாக இலங்கையின் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார்.
  • இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில் 19ஆவது அதிகாரி கெடெட் ஆட்சேர்ப்பு பாடநெறியில் 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார்.
  • அந்த மனிதாபிமான நடவடிக்கையில் 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார்.
எழுத்து அளவு:

பிரதானி மற்றும் இலங்கை இராணுவ செயற்பாட்டு சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

4 தசாப்தங்களாக இலங்கையின் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக சேவையாற்றினார்.

இவர் இலங்கை இராணுவத்தில் தியத்தலாவவிலுள்ள இலங்கை இராணுவ பீடத்தில் 19ஆவது அதிகாரி கெடெட் ஆட்சேர்ப்பு பாடநெறியில் 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி சேர்ந்தார்.

சவேந்திர சில்வா வடக்கு, கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் விசேடமாக செயற்பட்டிருந்தார்.

அந்த மனிதாபிமான நடவடிக்கையில் 58வது படைப்பிரிவின் தளபதியாக செயல்பட்டார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 31, 2022 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.

அதன் பிறகு, அவர் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகி நான்கு ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றினார்.

அதாவது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் கீழ் அவர் செயற்பட்டிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...