Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: மனுஷவின் சகாக்கள் தலைமறைவு

T

The Leader Desk

டிசம்பர் 29, 2024 • 5:15 AM

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: மனுஷவின் சகாக்கள் தலைமறைவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ள தொழில் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரைத்தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • இதன்படி மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளராக இருந்த பாக்ய காரியவசம் என்ற நபரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர ஹிரோஷன நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டியே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
எழுத்து அளவு:

உள்ள தொழில் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரைத்தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர ஹிரோஷன நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டியே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மனுஷ நாணாயக்காரவுக்கு நெருங்கிய மேலும் சில தரப்பிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளராக இருந்த பாக்ய காரியவசம் என்ற நபரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்,  இஸ்ரேல் தொழில் மற்றும் தென்கொரிய வேலைகளை பெற்று தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர் மற்றும் பலர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த தேசப்பிரிய லியனகே என்பவரும் இந்த மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...