பொத்துவில் உடும்புக்குளம் செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

பொத்துவில் 15 களப்புக்கட்டை பிறப்பிடமாகவும் ஹிஜ்ரா நகர் ஜெய்க்கா கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான ஹயாத்து லெப்பை முனாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி