Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘அரசியல் இலஞ்சவாதிகள் தமிழினத்தின் துரோகிகள்’

T

The Leader Desk

ஜனவரி 29, 2025 • 3:18 PM

‘அரசியல் இலஞ்சவாதிகள் தமிழினத்தின் துரோகிகள்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • “அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள்.
  • அதில் தமிழ் அரசியல் வாதிகள் சிலர் சம்பந்தப்பட்டிருந்தார்கள், தாமாகவே தேர்தல் அரசியலிலிருந்து விலகினார்கள்.
  • அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை என்று, இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

“அரசியல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக் கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை என்று, இலங்கைத் தமிழசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

“மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனை மூலமாக சமூகச் சீரழிவை ஏற்படுத்துவது தொடர்பில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். இது தொடர்பில் பலவிதமான வேலைத்திட்டங்களைப் பல காலமாகச் செய்து வருகின்றோம்.

“அரசியல் இலஞ்சமாக சமூக விரோத செயற்பாட்டுடன் தொடர்புடைய மதுபான சாலைகள் வழங்கப்பட்டமை பிரதான விடயமாகப் பார்க்கப்பட வேண்டும். அதில் தமிழ் அரசியல் வாதிகள் சிலர் சம்பந்தப்பட்டிருந்தார்கள், தாமாகவே தேர்தல் அரசியலிலிருந்து விலகினார்கள். ஆனால், பலர் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.

“ஆகவே, இது தொடர்பாக மக்கள் தமது கரிசனையைச் செலுத்தவேண்டும். அரசி யல் இலஞ்சம் பெறுகின்றவர்கள், கட்டாயம் எமது இனத்தைக் காட்டிக்கொடுப்பார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கத் தேவையில்லை.

“தங்களுடைய சொந்த நலன்களுக்காகச் சொத்துக்களைக் குவிப்பதற்காகப் பலர் இவ்வாறு செயற்படுகின்றார்கள். அவர்களை அடையாளம் கண்டு, மக்கள் சரியான விதத்தில் செயற்படவேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...