Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு

T

The Leader Desk

ஜனவரி 29, 2025 • 2:35 PM

சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் அதிகரிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213ஆக அதிகரித்துள்ளதாக, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
  • மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
  • இதில் 16 வயதிற்கு குறைந்த காதல் உறவால் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களே பெரும்பாலானவை ஆகும்.
  • அதாவது இது விருப்பப்படி நடப்பவையாகும்.
எழுத்து அளவு:

2024ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213ஆக அதிகரித்துள்ளதாக, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரித்த 167 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் இது அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

2023 மற்றும் 2024 ஆண்டுகளை ஒப்பிடும்போது சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது, ​​குறிப்பிடத்தக்க குறைவு அல்லது அதிகரிப்பு எதுவும் இல்லை. உதாரணமாக, இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக பதிவாகின்றது.

இதில் 16 வயதிற்கு குறைந்த காதல் உறவால் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக  சம்பவங்களே பெரும்பாலானவை ஆகும். அதாவது இது  விருப்பப்படி நடப்பவையாகும்.

2023இல் 1,237, 2024இல் 1,254 ஆக பதிவாகியுள்ளன. ஆனால், 2023இல் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 167 பதிவாகியுள்ள நிலையில், இது 2024 ஆம் ஆண்டில் 213 ஆக அதிகரித்துள்ளது.

இதனால்  இந்த சிறுமிகள் பாதிக்கப்படுவதோடு பிறக்கும் குழந்தையும் பாதிக்கும். இந்த சிறுமிகள் பெரும்பாலும் கல்வித் துறையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். "இந்த நிலைமை குறிப்பாக விவாதிக்கப்பட வேண்டும்." என்றார்.

அத்துடன் சிறுவர்களை கொடுமைப்படுத்தும் சம்பவங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2023 இல் 103 ஆகவும், 2024 இல் 123 ஆக அதிகரித்துள்ளதாகவும் ரேணுகா ஜயசுந்தரா மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...